டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜி.பி. முத்து ஸ்டைலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக ஜி.பி. முத்து கலந்து கொள்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் சீசன் 5 பற்றிய அறிவிப்பு இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் யார் என்ற கேள்வி இணையதளத்தில் உலா வரும் நிலையில் உத்தேச பட்டியலும் ஒருபுறம் வெளியாகி பரவி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி அண்மையில் செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவொன்று, உத்தேச பட்டியலிலிருக்கும் ஜி.பி. முத்து பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்கிறார் என்பதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
டிக் டாக் பிரபலமான ஜி.பி.முத்து அவர் வெளியிடும் அனைத்து வீடியோ பதிவுகளிலும் 'வணக்கம் நண்பர்களே' என்று தான் ஆரம்பிப்பார். தற்போது விஜய் டிவியும் தனது இன்ஸ்டாகிராமில் 'வணக்கம் நண்பர்களே' என்ற பதிவை வெளியிட்டுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் அந்த பதிவின் கீழ் 'தலைவரே இங்கேயும் வந்துட்டீங்களா' என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் ஜிபி முத்து விஜய் டிவி நடிகை ரவீனா தாஹாவுடன் இணைந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். எனவே, அவர் விஜய் டிவி வட்டாரத்தில் நெருக்கமாக இருப்பதால் இந்த பதிவு அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைகிறார் அல்லது விஜய் டிவியின் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார் என்ற தகவலை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது என செய்திகள் பரவி வருகிறது.




