செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா கணேஷ், சின்னத்திரையில் தற்போது பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். சுமங்கலி, கேளடி கண்மணி, லட்சுமி வந்தாச்சு சீரியல்களை தொடர்ந்து பாக்கியலட்சுமியின் ஜெனி கதாபாத்திரம் இவருக்கு நல்லதொரு பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது.
இந்நிலையில், திவ்யா கணேஷ் புதிதாக ஒளிபரப்பாக உள்ள அன்னம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஒருபுறம் பாக்கியலட்சுமி தொடர் முடிவுக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் திவ்யா கணேஷ் வேறொரு டிவி தொடருக்கு தாவியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாக்கியலட்சுமி தொடரில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்த ராஜலெட்சுமியும் அன்னம் தொடரில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.