செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சுந்தரி தொடரின் மூலம் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் அதிக புகழுடன் வலம் வருகிறார் நடிகை கேப்ரில்லா செல்லஸ். ஆர்மாக்ஸ் நிறுவனம் நடத்தும் கருத்துக் கணிப்பில் அதிக முறை மக்களின் பேவரைட் ஹீரோயினாக முதலிடம் பிடித்த இவர், நடிப்பின் மீது அதிக காதல் கொண்டவர். டிக்-டாக் மூலம் தன்னுடையை திறமையை வெளிப்படுத்தி சினிமாக்களிலும் நடித்துள்ளார். இவர் அண்மையில் தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் வைத்து அங்கிருக்கும் தாத்தா பாட்டிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டாடியுள்ளார். கேப்ரில்லாவை பார்த்த அவர்கள், அவரை தனது பேத்தி போல் கொஞ்சியும் விளையாடியும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் கூறினர். கேப்ரில்லாவும் அவர்கள் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். தற்போது இந்த வீடியோ இண்ஸ்டாகிராமில் வைரலாவதை தொடர்ந்து கேப்ரில்லாவுக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.