'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய புகழை தமிழ்நாட்டில் பெற்று தந்தது. இருப்பினும், ஓவியாவுக்கு சினிமா வாய்ப்பு மட்டும் ஏனோ சரிவர அமையவில்லை. தற்போது நீண்ட நாட்கள் கழித்து அவர் நடிப்பில் 'பூமர் அங்கிள்' என்ற படம் வெளியாகவுள்ளது. அதன் பர்ஸ்ட் லுக்குக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பெரிய பட்ஜெட் படங்களில் முன்னணி ஹீரோயினாக ஜொலிக்க வேண்டிய ஓவியாவுக்கு இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில ப்ராஜெக்ட்டுகள் தான் கிடைத்து வருகிறது. இதனால் ஓவியா தனது கவனத்தை மீண்டும் சின்னத்திரை பக்கமே செலுத்தியுள்ளார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் ஓவியா நடுவராக பங்கேற்க உள்ளார். இதில் ஓவியாவுடன் நடிகை சினேகா, சங்கீதா மற்றும் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் போன்றோரும் நடுவராக பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவியா, பாபா பாஸ்கர் மற்றும் பிறர் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.