அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
வீஜேவாக தனது கேரியரை ஆரம்பித்த காஜல் பசுபதி, ஆரம்ப காலக்கட்டங்களில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் 2009ம் ஆண்டு ராடன் நிறுவனம் தயாரித்த அரசி சீரியலில் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்திய காஜல், சீரியல் பக்கம் திரும்பவேயில்லை. அதேசமயம் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே, சமீப காலங்களில் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க கிளாமர் யுக்திகளையும் கையாண்டு வருகிறார். ஆனால், இதற்கிடையில் சீரியல் நடிகைகள் எல்லாம் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வர ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்கள் மூவருமே சீரியலில் நடித்து அதன் பிறகு தான் சினிமா வாய்ப்பை பெற்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த காஜல் பசுபதி, மைனா நந்தினிக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். அதேசமயம் தன்னுடைய மற்றொரு பதிவில், 'கமல் சார் படத்தில 3 பேருமே சீரியல் ஆர்டிட்ஸ்ட்டா? விஜய்சேதுபதிக்கு ஜோடியா? சூப்பர் ஜி சூப்பர். இதுக்கு நாங்களும் சீரியலே பண்ணியிருக்கலாம் போல!!' என வருத்தமாக பதிவிட்டுள்ளார்.