லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகை ப்ரியா விஷ்வா முதன்முதலில் வேந்தர் டிவியில் ஒளிபரப்பான ட்ரீம் வாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து ப்ளே பேக் சிங்கராக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வந்தார். இதற்கிடையில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆயுத எழுத்து' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். தற்போது ஜீ தமிழின் 'அன்பே சிவம்' தொடரில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சற்று குண்டாக முதிர்ந்த தோற்றத்தில் இருந்த ப்ரியா விஷ்வா, ஆயுத எழுத்து தொடரில் மூத்த மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது உடல் எடையை குறைத்து இளமையாக மாறியுள்ள ப்ரியா, ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் அழகில் மெருகேறி வருகிறார். ப்ரியா விஷ்வாவின் அந்த ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.