3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் | பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: திடீரென காணாமல் போன பேபி உமா | தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்? | 'மைதிலி என்னை காதலி' நடிகர் மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல் | 'கே. சங்கர் 100' : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் | தள்ளிப்போனது டாக்சிக்: அந்த இடைவெளியில் வேறு படங்கள் வருமா? | இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி |

நடிகை சாயா சிங் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளார். இவரது நடிப்பிற்கு சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாயா சிங் தற்போது 'பூவே உனக்காக' மற்றும் கலர்ஸ் தமிழ் சேனலின் 'நம்ம மதுர சிஸ்டர்ஸ்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். அதிலும், நம்ம மதுர சிஸ்டர்ஸ் தொடரின் கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய லீட் கதாபாத்திரமே சாயா சிங் தான். ஆனால், சாயா சிங் தற்போது 'நம்ம மதுர சிஸ்டர்ஸ்' தொடரிலிருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவர் எதற்காக விலகினார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. சாயாசிங்கிற்கு பதிலாக ஸ்ருதி லெக்ஷிமி என்ற நடிகை இனி இந்திராணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.




