‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களில் பிரபலமான போட்டியாளர்களை வைத்து ஆரம்பம் முதலே அசத்தாலாக தொடங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் 'உங்களுக்கென்ன வேலை' என்ற டாஸ்க் நடைபெற்றது. அதில் பேசிய ஜூலி, 'பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றவுடன், ஒரு தொண்டு நிறுவனத்தில் இருக்கும் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சுமார் 23 லட்சம் பணம் தேவைப்படுவதாக தெரிய வந்தது. நான் நண்பர்கள் மற்றும் சோஷியல் மீடியா உதவியுடன் அக்குழந்தையின் மருத்துவ செலவுக்கான பணத்தை சேகரித்து கொடுத்தேன். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது. இந்த விஷயத்தை இன்று வரை நான் யாரிடமும் சொன்னதில்லை. எங்களுக்கு சொந்தவீடு கூட கிடையாது. இருப்பினும் இது போன்ற சமூக தொண்டாற்றுவது மனதிற்கு நெகிழ்வை தருகிறது' என கூறியுள்ளார்.
மேலும், 'ஒருவர் செய்யும் நல்ல செயல் வெளியே வராது. ஆனால், அவர்கள் செய்யும் சிறு தவறு கூட வைரலாக பரவி, சமூகத்தில் அவரை கேலிக்கூத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது' எனவும் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரமங்கை, போராளி என பெயரெடுத்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொய்யாக நடித்ததால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் இன்று வரை ஜூலியை சோஷியல் மீடியாவில் நெட்டீசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.




