‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பரீனாவின் குழந்தை என இணையத்தில் தவறாக பரப்பப்படும் போட்டோவால் அவரது கணவர் கோபமடைந்து 'தப்பா ஷேர் பண்ணாதீங்க' வேண்டாம் என கூறியுள்ளார். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லியாக நடித்து வருபவர் பரீனா. அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பரீனாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. மகன் பிறந்திருப்பாதாக அவர் அறிவித்த நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர். இதற்கிடையே வெண்பாவின் குழந்தை என தவறான போட்டோ போட்டு சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் கோபமடைந்த பரீனாவின் கணவர், 'நாங்கள் இன்னும் குழந்தை போட்டோவை வெளியிடவில்லை. சிலர் தவறான புகைப்படங்களை பரப்பி வருகின்றனர். அதில் பல மோசமான தலைப்புகளையும் கொடுத்திருக்கின்றனர்' என கூறியுள்ளார் .