தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
மறைந்த முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என சொல்லப்பட்ட 'தலைவி' படம் இந்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால் அங்கு படம் வெளியாகவில்லை. அந்த மாநிலம் தவிர மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகளில் வெளியானது.
ஹிந்தியிலும் இப்படம் பெரும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இரண்டு வாரங்களில் ஓடிடி வெளியீடு என்று சொல்லப்பட்டதால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் பலவும் படத்தை வெளியிடவில்லை. இதன் காரணமாக படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மூன்று மொழிகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக இப்படத்தின் வசூல் 20 கோடி தாண்டினாலே அதிகம் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படத்தை 100 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஓடிடி வெளியீடு, சாட்டிலைட் உரிமை என ஆகியவற்றின் மூலம்தான் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டும். தியேட்டர் வசூல் பெரிய அளவில் வந்திருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்கும். தற்போது முதலுக்கு மோசம் இல்லாத நிலையில்தான் இப்படம் இருக்கிறது என்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் என்ன என்பதை தயாரிப்பாளர்தான் தெரிவிக்க வேண்டும்.
ஹிந்தியில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி என்று சொல்லப்பட்டது. இன்று முதல் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து தமிழ், தெலுங்கு படங்களும் ஓடிடியில் வெளியாகும்.