பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு |
சென்னை 28, சுப்ரமணியபுரம் படங்கள் மூலம் பிரபலமானவர் ஜெய். முன்வரிசை ஹீரோ பட்டியலில் இணையவில்லை என்றபோதும் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். தற்போது அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
அதில் சுசீந்திரன் இயக்கத்தில் மட்டும் குற்றமே குற்றம், சிவ சிவா என இரண்டு படங்களில் நடிக்கிறார். இதில் சிவ சிவா என்ற படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் ஜெய். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நான் நடிகரானது ஒரு விபத்து. காரணம் நான் இசையமைப்பாளராக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டேன். ஆனபோதும் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுகளுடன் பயணித்து வந்தேன். 19 வருடங்கள் கழித்து இப்போது சிவ சிவா என்ற படத்தில் எனது கனது கனவு நனவாகியுள்ளது. இந்த படத்தில் எனது இசையில் உருவான காடமுட்டை என்ற பாடலின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெய்.