ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெகிடி, அவன் இவன் போன்ற படங்களில் நடித்தவர் ஜனனி. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார். கொரோனா தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து வருவதால் 100 நபர்களுடன் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஜனனி நடிகர் பரத்துடன் நடித்து வரும் யாக்கைத் திரி படத்திற்கான டப்பிங்கைத் தொடங்கியுள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பியது குறித்து ஜனனி கூறியுள்ளதாவது. 'உண்மையில், இரண்டாவது அலை நம்மை கடுமையாகத் தாக்கிய பிறகு நான் வெளியே வருவது இதுவே முதல் முறை. ஏப்ரல் மாதத்தில் இரண்டு படங்களுக்கு கிட்டத்தட்ட டப்பிங் செய்து முடித்திருந்தேன். பின்னர் கொரோனா அதிகரித்ததால் வேலையை நிறுத்த வேண்டியிருந்தது. இப்போது நான் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளேன். அதனால் குறைந்தபட்சம் ஸ்டுடியோவுக்குப் போக மட்டும் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் முகமூடி அணிந்து முறையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் டப்பிங் செய்தோம்.
நான் உற்சாகமாக இருக்கிறேன், ஆனால் மீண்டும் வேலைக்கு வர பயமாக உள்ளது. எனக்குத் தெரிந்த பலர் கொரோனவால் இறந்துள்ளனர். எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மாறிவிட்டன. ஆனால் வாழ்க்கை தொடரத் தான் வேண்டும். நாம் எப்போதும் வீட்டில் வாழ முடியாது. தடுப்பூசியின் முதல் தவணையை எடுத்துக் கொண்டுள்ளது எனக்கு கொஞ்சம் நம்பிக்கையைத் தந்துள்ளது. ஆனால் நிச்சயமாக, நான் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவேன். வேலையைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.