ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமாத்துறையினர் பல்வேறு சேவைகளை செய்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். அவர்களில் நடிகை சஞ்சனா கல்ராணியும் ஒருவர். பெங்களூருவில் தன் சஞ்சனா கல்ராணி அறக்கட்டளை வாயிலாக தினமும் 800 பேருக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கி வருவதுடன், ஏழைகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். அத்துடன் யோகா செய்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சர்வதேச யோகா தினத்தையொட்டி தன் அக்ரோ யோகா மார்க்கம் குறித்து விளக்கி வருகிறார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் மனம் திறந்ததாவது... பெங்களூரு பள்ளியில் படித்தபோது அருகில் யோகா மையம் இருந்தது. அங்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. யோகா செய்வோரை பார்த்து நாமும் இதுபோல செய்யலாம் என தோன்றியது. அப்படி தான் யோகா கற்க துவங்கினேன். ஆனால் அதை கற்ற பிறகு தான் அருமையை உணர்ந்து கொண்டேன்.
நம் முன்னோர்கள் நமக்காக ஏராளமான பாரம்பரிய, பழக்கவழக்கங்கள், உடல் நலன் பேணும் பல பொக்கிஷங்களை விட்டு சென்றுள்ளனர். அவற்றில் ஒன்று தான் யோகா கலை. உடம்பை நம் சொல் படி கேட்க செய்ய யோகா கலையால் மட்டுமே முடியும். 17 வயதில் கற்ற யோகாவை இன்று வரை தொடர்ந்து வருகிறேன்.சமீபகாலமாக கொரோனா நிவாரண சேவை, படப்பிடிப்புகள் என பிசியான நாட்களை தவிர்த்து மற்ற நாட்கள் அனைத்திலும் யோகா, தியானம், பிரணாயாமம் பயிற்சி உண்டு.
சாப்பிடாமல் கூட இருந்து விடுவேன். ஆனால் யோகா செய்யாமல் இருந்ததில்லை. யோகா செய்வோருக்கு கொரோனா நோய் தொற்று கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் யோகா கலையில் சில பயிற்சிகள் உண்டு. அதை செய்தாலே போதும். கொரோனா கிருமிகள் பெரும்பாலும் நுரையீரலை தாக்குவதாக கூறப்படுகிறது. மூச்சுபயிற்சி, பிரணாயாமம் செய்வதன் மூலம் நம் நுரையீரலை பலப்படுத்திடலாம். இதன் மூலம் சுத்தமான ஆக்சிஜன் நுரையீரல் சென்று ரத்த ஓட்டத்தை சீராக்கும். அறக்கட்டளை மூலம் அக்ரோ யோகா என்ற மற்றொருவருடன் இணைந்து செய்யும் யோகா பயிற்சியை கற்று கொடுத்தும் வருகிறேன்.
இதன் மூலம் உடலை வலுவானதாக மாற்றிடலாம். இதுபோன்ற நுட்பமான அரிய கலைகளை கற்றிருந்ததால் தான் நம் முன்னோர்கள் எந்த நோயுமின்றி வாழ்ந்துள்ளனர். நம் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் சீரழித்ததன் விளைவு கொரோனா போன்ற கொடிய நோய் தொற்றுக்குள்ளாகி வருகிறோம். இனியாவது யோகா செய்வோம், உடல் நலம் பேணுவோம், என்றார்.