நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்தியன்-2 படத்தை இயக்கி முடித்த பிறகுதான் வேறு படவேலைகளை தொடங்க வேண்டும் என்று டைரக்டர் ஷங்கருக்கு எதிராக சென்னை மற்றும் ஐதராபாத் உயர்நீதி மன்றங்களில் லைகா நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. ஆனபோதும் தெலுங்கில் ராம்சரண், ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து இயக்கும் அந்நியன் ரீமேக் ஆகிய படங்களின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில், ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் அவர் ஒரு இளம் தலைவராக நடிப்பதாக கூறப்படும் நிலையில்,அப்படத்தில் நாயகியாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வரும் ஆலியாபட் நடிப்பதாக முன்பு செய்திகள் வெளியாகின. அதன்பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனும் இன்னொரு நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது ஹிந்தியில் எம்.எஸ்.டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான கியாரா அத்வானி நடிப்பதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.