விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் | ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் : பாடகர் ரப்பி ஷெர்கில் | மங்கத்தா, திரவுபதி 2 மோதல்... மாமன், மச்சான் மோதலா | ஆண்கள் பற்றி எந்த கமெண்ட்டும் சொல்லாத தபு | 37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜுனியர் என்டிஆர். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.
தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் என டுவீட் செய்துள்ளார். “எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நெகட்டிவ் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. கோவிட் 19 தொற்றை நாம் மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நல்ல பாசிட்டிவ் மனநிலையுடன், கவனத்துடன் அதை வெற்றி கொள்ள முடியும். இந்த போராட்டத்தில் உங்கள் மன வலிமை தான் சக்தி வாய்ந்தது, வலிமையாக இருங்கள், அச்சப்பட வேண்டாம்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜுனியர் என்டிஆர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




