9 மில்லியன் பார்வைகளைக் கடந்த ரஜினிகாந்த் அறிக்கை | துரந்தர் 2 : ஹிந்தி தவிர மற்ற மொழி பிரிமியர் காட்சிகள் ரத்து ? | 37 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர்? | சினிமா, அரசியல் சர்ச்சை : ஒரே நாளில் மன்னிப்பு கேட்ட மூவர் | சூப்பர் ஹீரோயின் ஆன அடா சர்மா | தயாரிப்பாளர்கள் ஸ்கிரிப்டை படிக்க வேண்டும் : விஜய் சேதுபதி அட்வைஸ் | ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் : குவியும் பாராட்டுகள் | 'நூறு சாமி'யில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை | பிளாஷ்பேக் : விஜயகாந்தை கேப்டன் ஆக்கியது 'கேப்டன் பிரபாகரன்' அல்ல | பிளாஷ்பேக்: 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டு காணாமல் போன நடிகர் |

ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் இயக்கும் படம் WWW (Who, Where, Why). இதில் ஆதித் அருண் என்ற புதுமுகத்திற்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார். தெலுங்கில் அறிமுகமான ஷிவானி தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. சைமன் கே.கிங் இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.
இது குறித்து இயக்குனர் கே.வி.குகன் கூறியதாவது: படத்தின் டீஸரை, விஜய் சேதுபதி வெளியிட்டது எங்கள் அனைவருக்குமே பெருமை. படத்தின் டீஸர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் குறித்து நிறைய விசயங்களை ஆவலுடன் கேட்டறிந்தார். படத்தில் நடித்துள்ள மூத்த நடிகர்களான டாக்டர் ராஜேசேகர், ஜீவிதா தம்பதியின் மகள், ஷிவானி ராஜசேகருடைய நடிப்பையும், அவரது திரைப்பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் கூறினார்.
நடிகர் ஆதித் அருணை அவருக்கு நெடுங்காலமாக தெரியும். நடிப்பின் மீதான ஆதித் அருணின் தீவிரமான காதலையும் கடின உழைப்பையும் வெகுவாக பாராட்டினார். முழுப்படத்தில் அவரது நடிப்பை காண ஆவலாக இருப்பதாக கூறினார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.




