இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
மலையாளத்தில் சார்லி, ஒரு வடக்கன் செல்பி உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான். தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் சமீபத்தில் வெளியான 'பாவ கதைகள்' ஆந்தாலாஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், இந்தியிலும் மோஸ்ட் வான்டட் ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.
இவருக்கும் மலையாள நடிகை ஆன் அகஸ்டின் என்பவருக்கும் கடந்த 2014ல் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஆறு வருடங்களே ஆன நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த தகவலை ஜோமோனே சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க, வரும் பிப்-9ஆம் தேதி ஆஜராகும்படி இவரது மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சேர்தலா குடும்ப நீதிமன்றம்.
மலையாள குணச்சித்திர நடிகரான மறைந்த அகஸ்டின் என்பவர் மகள் தான் இந்த ஆன் அகஸ்டின்.. சில படங்களிலும் நடித்துள்ளார். அந்த சமயத்தில் தான் ஜோமோன் டி.ஜானுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2013லேயே நிச்சயதார்த்தமும் நடந்தாலும். தனது காதலர் ஒரு தமிழ் படத்திலாவது பணியாற்றிய பிறகுதான் திருமணம் என்று பிடிவாதமாக நின்றார் ஆன் அகஸ்டின். அதன்படி, ஜோமோன் டி ஜான், பிரம்மன் படத்திலே பணியாற்றி முடித்ததும் தான், அவரை திருமணம் செய்துகொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது...