நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டிருக்கும் ஜேம்ஸ் பாண்ட் கதையின் 25வது படம் நோ டைம் டு டை. இது 25வது படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இது முக்கியமானதாகும். இதனால் இதனை இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்டமாக பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்கள்.
நான்கு படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த டேனியல் க்ரெய்க் இனி ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்த பிறகும், 25வது படம் என்பதால் இதுதான் கடைசி படம் என்று அறிவித்து நடித்திருக்கும் படம். கேரி ஜோஜி புகுனாகா இப்படத்தை இயக்கியுள்ளார். லியா செடோக்ஸ், பென் விஷா, நவோமி ஹாரிஸ், ஜெஃப்ரி ரைட், கிறிஸ்டோப் வால்ட்ஸ், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
நோ டைம் டு டை முதலில் கடந்த ஆண்டு நவம்பர் 8ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது, கொரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கி இருப்பதால் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு வருகிற அக்டோபர் 8ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.