பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி கலாட்டா செய்தவர் ஷாலு ஷம்மு. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ஷாலு. இதன் மூலம் சமூகவலைதளப்பக்கத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடிகை ஷாலுஷம்மு தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரி ஸ்டேட்டசில், "உங்களுக்கு நல்லவராக இருக்கும் ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுங்கள். அவர் உங்கள் பெற்றோருக்கு நல்லவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் பிம்பத்திற்கு நல்லவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வங்கி கணக்கிற்கு நல்லவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வாழ்வை உணர்வுபூர்வமாக முழுமையாக்கும் ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுங்கள்", என குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் தான் காதலில் இருப்பதை ஷாலு ஷம்மு உறுதிப்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.