'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் குடும்பத்தினர் பலரும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சிரஞ்சீவிக்குப் பிறகு அவரது தம்பி பவன் கல்யாண், ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். இன்னும் சொல்லப் போனால் சிரஞ்சீவியை விட பவனுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
பவன் கல்யாண், ராம் சரண் இருவரும் அடுத்து தமிழ் இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடிக்கப் போவதாக ஒரு தகவல் டோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.
ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. அதனால், இந்திய அளவில் ஒரு படத்தைக் கொடுக்க ஷங்கர் முயற்சித்து வருகிறாராம். தற்போதைக்கு தமிழ் ஹீரோக்களை விட தெலுங்கு ஹீரோக்கள் தான் 'பான் இந்தியா' அளவில் ரீச் ஆகியுள்ளனர். அதிலும், ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். அப்படம் வெளிவந்த பின் ராம் சரண் இந்திய அளவில் பேசப்படுவார் என எதிர்பார்த்தே அவரை தன் படத்தில் நடிக்க வைக்க ஷங்கர் பேசி வருகிறாராம். மேலும், இப்படத்தில் மற்ற மொழி ஹீரோக்களும் நடிக்கலாம் என்ற ஒரு தகவல் உள்ளது.
'இந்தியன் 2' அடுத்த மாதம் கூட ஆரம்பமாகவில்லை என்றால் ஷங்கர் இந்த புதிய படத்தை இயக்கப் போனால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.