டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் ‛பாகுபலி'. இப்படத்தின் முதல் பாகம் 2015ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2017ம் ஆண்டில் வெளியானது. இந்நிலையில் தற்போது பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ‛பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் ஒரே படமாக அக்டோபர் 31ம் தேதி வெளியிடுகிறார்கள். இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 44 நிமிடங்கள் ஆகும்.
இந்நிலையில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஹைதராபாத், பெங்களூரு பகுதிகளில் சுமார் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது இந்த படத்திற்கு மீண்டும் ஒரு மிகப் பெரிய ஓப்பனிங் இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது.