சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா மோகன். சமீபத்தில் அவரை 'டிரோல்' செய்து சமூக வலைத்தளங்களில் நிறைய பதிவுகள் வெளியாகின. ஒரு முன்னணி நடிகருக்கு மேனேஜர் ஆக இருப்பவர் தான் பிரியங்காவின் முன்னாள் மேனேஜர் ஆக இருந்தார். அவரை விட்டு விலகிவிட்டார் பிரியங்கா. அதனால்தான் அந்த முன்னாள் மேனேஜர் பிரியங்காவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்ய வைக்கிறார் என்று ஒரு சர்ச்சை எழுந்தது.
கடந்த சில நாட்களாக பிரியங்கா மோகன் அரை குறை ஆடையுடன் பாத்ரூமில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது குறித்து பிரியங்கா மோகன், “ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தவறான புகைப்படம் ஒன்று சுற்றி வருகிறது. இது போன்ற தவறான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். ஏஐ என்பது நெறிமுறைக்கு உட்பட்டு செய்யப்பட வேண்டிய ஒரு கிரியேட்டிவிட்டி, இப்படி தவறாக செய்வதற்கல்ல. என்ன கிரியேட் செய்கிறோம் என்பதை அறிந்து அதை பகிருங்கள், நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாண் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ஓஜி' படம் 300 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது. அந்த வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்ட சிலர்தான் இப்படி செய்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.




