நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

டுலெட் படத்துக்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ஒளிப்பதிவாளர் செழியன், அஜயன் பாலா இயக்கும் மைலாஞ்சி படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வாய்ப்பு குறித்து செழியன் பேசுகையில், ‛‛அஜயன் பாலா எனக்கு நண்பன். 2000ம் ஆண்டில் நான் ஒளிப்பதிவாளர் பி. சி.ஸ்ரீராமின் உதவியாளராக பணியாற்றியபோது, அஜயன் பாலா மற்றொரு இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றினார்.
அப்போது எதிர்காலம் குறித்து பேசுகையில் 'நான் முதலில் படம் இயக்கினால் அதற்கு நீதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்' என என்னிடம் அவர் கேட்டுக் கொண்டார். உடனே அவருடைய பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, ' இதுதான் உனக்கான அட்வான்ஸ்' என்றார். அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அவர் இயக்குனர் ஆன பின் திடீரென்று அலுவலகத்திற்கு வந்து படத்தில் என்னிடன் பணியாற்ற சம்மதமா எனக் கேட்டார். அப்போது அவரிடம், 'நீ கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கிறது. வா படப்பிடிப்புக்கு செல்லலாம்' என்றேன்.
ஊட்டி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பாலுமகேந்திரா தான். அவர் காட்சிப்படுத்தாத லொகேஷன்களை தேடித் தேடி இந்த படத்திற்காக பதிவு செய்திருக்கிறோம். இருபது ஆண்டுகள் கழித்து கலர்புல்லாக கிளாஸியாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். நான் பெரிதும் மதிக்கும் பாலுமகேந்திராவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்," என்றார்.