இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

1985ம் ஆண்டு தாணு தயாரிப்பில் சக்தி - கண்ணன் இரட்டையர்கள் இயக்கிய ஹாரர் திகில் திரைப்படம் 'யார்'. இரட்டையர்களில் ஒருவரான கண்ணன் பின்னாளில் 'யார்' கண்ணன் என்ற பெயரில் பல படங்களை இயக்கினார். இப்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
யார் படத்தில் அர்ஜுன், நளினி, ஜெய்சங்கர், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கவுரவ வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் தோன்றினார். தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த தாணுவின் தயாரிப்பு என்பதால் கவுரவ தோற்றத்தில் ரஜினி நடித்தார். தாணுவோடு அப்போது இணைந்து பணியாற்றிய ஜி.சேகரன் படத்தின் கதையை எழுதினார். பின்னாளில் இதே ஜி.சேகரன்தான் 'ஜமீன் கோட்டை' என்ற வெற்றிப் படத்தை இயக்கினார்.
பூமியின் 8 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ஒரு அமானுஸ்ய அதிசயம் நடக்கும். அதேநேரத்தில் மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் தாய் இறந்து போவதால் பணக்காரரான ஜெய்சங்கர் அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த சிறுவன் வளர்ந்து பதினெட்டு வயதை அடையும் போது சில விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதற்கு காரணம் அந்த பையன் சாத்தானின் மகன் என்பது தெரிய வருகிறது.
இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு அவனை தீய செயலில் இருந்து விடுவிக்க முயற்சி செய்பவர்கள் அடுத்தடுத்து இறப்பார்கள். இதனால் சாத்தானின் சக்தியை முறியடிக்க தெய்வ சக்தியை அதிகரிப்பார்கள். இந்த போராட்டத்தில் யார் வென்றார்கள் என்பதுதான் படத்தின் கதை.
திகில் படங்கள் அபூர்வமாக வந்த காலத்தில் சில தொழில்நுட்பங்களோடு வந்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. வி.எஸ். நரசிம்மனின் பின்னணி இசை மற்றும் ராஜராஜனின் ஒளிப்பதிவு படத்தின் வெற்றிக்கு உதவியது.
இந்த படத்தில் ரஜினி நடிகர் ரஜினியாகவே நடித்தார். தெய்வ சக்தியை எழுப்ப எல்லோரும் பிரார்த்தனை செய்வார்கள். ரஜினியும் பிரார்த்தனை செய்வது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியை பெரிய அளவில் விளம்பரப் படுத்தியதும் படத்தின் வெற்றிக்கு காரணமானது.