விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் உமன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' என்கிற திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்களே ஆன நிலையில் சுமார் 250 கோடி வசூலித்து மலையாளத்தில் இதற்கு முன்பு மோகன்லாலின் 'தொடரும், எல் 2 எம்புரான்' மற்றும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஆகிய படங்கள் செய்திருந்த வசூல் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
டொமினிக் அருண் என்பவர் இயக்கிய இந்த படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். இப்போது வரை தியேட்டர்களை படம் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் இந்த படம் ஓடிடியில் ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளியாக இருக்கிறது என்று மீடியாவில் ஒரு செய்தி கடந்த இரண்டு நாளாக பரவி வந்தது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள துல்கர் சல்மான், “இப்போதைக்கு விரைவில் லோகா திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இல்லை. அதனால் சோசியல் மீடியாவில் வெளியான செய்திகளை நம்ப வேண்டாம். அது குறித்து நேரம் வரும்போது நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்த இந்தப் படத்துடன் வெளியான மோகன்லாலின் ஹிருதயபூர்வம் மற்றும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' ஆகிய படங்கள் வரும் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லோகா திரைப்படம் இன்னும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் எட்டு வாரம் கழித்தே ஓடிடியில் ஒளிபரப்பாகும் என்று சொல்லப்படுகிறது.