கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் |

தெலுங்கு, மலையாள படங்களை இயக்கிய மணிரத்னத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்பியவர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவை தம்பி. அப்போது வெற்றிகரமான ஜோடிகளாக இருந்த அம்பிகா, ராதா, மோகன் இணைந்து நடிக்க அதற்கேற்ப ஒரு கதையை தயார் செய்து அதனை மணிரத்னம் இயக்க ஏற்பாடானது. இதற்கு மணிரத்னமும் ஒத்துக் கொண்டார்.
அதற்கு முன்னதாக அவர் 'பகல்நிலவு' படத்தை இயக்கினார். அந்த படம் முடிந்து வரும்வரை கோவை தம்பி காத்திருந்தார். பின்னர் மணிரத்னத்திற்கு அந்த கதையை இயக்க விருப்பமில்லை. அது ஒரு சாதாரண காதல் கதை. அதை யார் வேண்டுமானாலும் இயக்கலாம் என்று கூறி 'மவுன ராகம்' படத்தின் கதையை சொன்னார். ஆனால் அந்த கதை கோவை தம்பிக்கு பிடிக்கவில்லை.
இதனால் வேறு வழியில்லாமல் மணிரத்னம் 'இதய கோவில்' படத்தை இயக்கினார். விருப்பமே இல்லாமல் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளை இயக்கினார். படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று மணிரத்னம் விரும்பினார், ஆனால் கோவை தம்பி, ராஜ ராஜனை நியமித்தார்.
ஒரு வழியாக படம் வெளிவந்து சுமாரான வரவேற்பை பெற்றது. இளையராஜாவின் பாடல்கள் பேசப்பட்டது. பின்னாளில் இது குறித்து பேசிய மணிரத்னம், "இதயகோவில் மாதிரியான படங்களை இயக்க நான் சினிமாவிற்கு வரவில்லை" என்று கூறினார். கோவை தம்பி குறிப்பிடும்போது இதயகோவில் படத்தின் பட்ஜெட்டை மணிரத்னம் 3 மடங்கு உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.