'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தை இயக்கி, அதில் கதை நாயகியாக நடித்துள்ளார் வனிதா. அவர் மகள் ஜோவிகா படத்தின் தயாரிப்பாளர். சென்னையில் நேற்று சிறப்பு காட்சி முடிந்தபின் வனிதா அளித்த பேட்டி: இன்னும் டென்சனாக இருக்கிறேன். எத்தனை தியேட்டர், வேறு என்னென்ன பிரச்னை என்பதில் தெளிவு இல்லை. அனைத்து படங்களுக்கும் இந்த நிலைதான். படத்தில் அடல்ட் கண்டண்ட் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். கதை அப்படி. இன்றைய தலைமுறைக்கு பிடிக்கும் என நம்புகிறேன். படத்தின் ஹீரோ வேறு வேலைகளில் பிசியாக இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை.
ராத்திரி சிவராத்திரி பாடலை ரைட்ஸ் வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம். படத்தில் அப்பா படம் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி வருகிறது. அவர் என்னிடம் எதுவும் கேட்கமாட்டார். நானே அவரின் காப்பிரைட் தானே. என் மகள் தெலுங்கில் நடிக்கப்போகிறார். அடுத்து தமிழில் நடிப்பார். என் மகளை நிறைய ட்ரோல் செய்கிறார்கள். விஜய்சேதுபதி மகன் சூர்யாவையும் பீனிக்ஸ் பட விஷயத்தில் கடுமையாக விமர்சனம், கிண்டல் செய்கிறார்கள். நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்க்கும் இதுதான் நடந்தது. அதை மீறி ஜெயித்தார். விஜய்சேதுபதி மகனும் விஜய் மாதிரி வருவார். என் மகளும் ஜெயிப்பாள். ஆரம்பத்தில் நயன்தாரா, திரிஷாவுக்கும் கூட இப்படிதான் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.