போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! |

ஜென் ஸ்டுடியோ சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிக்கும் படம் “நீ பாரெவர்”. அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடித்துள்ளனர். அர்ச்சனா ரவி 'மிஸ் சவுத் இந்தியா 2016'ல் 2வது இடம் பிடித்தவர். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் நடித்துள்ளனர். அஸ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார். ராஜா பட்டாச்சாரியார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் அசோக் குமார் கலைவாணி கூறும்போது, "இன்றைய தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. இப்படம் சென்னையின் இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20 முக்கிய டிரேட் மார்க் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், படத்தை திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்றார்.