‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் |
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் மே 1ம் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்தப் படத்தை விடவும் ஸ்டார் அந்தஸ்துடன் வெளியான 'ரெட்ரோ' படம் தோல்வியைத் தழுவ இந்தப் படம் தற்போது 50வது நாளைத் தொட்டுள்ளது. ஓடிடியில் வெளியான பிறகும் கூட இப்படத்தைத் தியேட்டர்களில் பார்த்து ரசித்து வந்தனர்.
75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்த ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாக இந்தப் படம் அமைந்தது. 50வது நாள் போஸ்டரைப் பகிர்ந்து படத்தில் நடித்த சிம்ரன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் இயக்குனர் அபிஷன், நாயகன் சசிகுமார் தங்களது படம் இன் 50வது நாளைத் தொட்டுள்ளதை மறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. எந்த ஒரு பதிவையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை.
இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் 'குடும்பஸ்தன், ட்ராகன், டூரிஸ்ட் பேமிலி' போன்ற ஸ்டார் அந்தஸ்து இல்லாத படங்கள் 50 நாட்கள் ஓடியுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று. வரவேற்பு, வெற்றி, வசூல் ஆகியவைதான் ஸ்டார் என்ற அந்தஸ்தை நிரூபிக்கின்றன என்று இந்தப் படங்கள் புரிய வைத்துள்ளன.