சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவில் வாரிசு நடிர்களில் ஒருவராக அறிமுகமானவர் அதர்வா. 80, 90களில் இளம் நாயகனாக வலம் வந்த நடிகர் முரளியின் மூத்த மகன். 2010ல் வெளிவந்த 'பாணா காத்தாடி' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அதர்வா. 2013ல் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'பரதேசி' படம் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஒரு படமாக இருந்தது.
அதன்பிறகு அவர் நடித்த படங்களில் 'ஈட்டி, இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் மட்டுமே அவருக்குக் குறிப்பிடும்படியான வெற்றிப் படங்களாக அமைந்தது. அதன்பிறகு கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் நடித்து வெளிவந்த 'பூமராங், 100, தள்ளி போகாதே, குருதி ஆட்டம், ட்ரிகர், பட்டத்து அரசன், நிறங்கள் மூன்று' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பேசப்படவில்லை.
இப்போது நான்கைந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அதர்வாவுக்கு நாளை மறுதினம் 'டிஎன்ஏ' படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு அவசியமான ஒன்று. இத்தனை வருடங்கள், இவ்வளவு படங்கள் அவருக்குத் தராத திருப்புமுனையை 'டிஎன்ஏ' தந்தால் தான் அவருக்கான அடுத்த படங்களுக்கும் வரவேற்பு இருக்கும்.