டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கியவர் கோபி நயினார். தற்போது அவர் இயக்கி உள்ள படம் 'மனுஷி'. இதனை இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் கம்பெனி தயாரித்துள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நாசர், தமிழ், ஹக்கிம் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படும் இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்த படம் தயாராகியுள்ளது. இந்த படம் அரசுகளை, குறிப்பாக காவல் துறையை மோசமாக சித்தரித்துள்ளதாக கூறி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'படத்துக்கு சென்சார் சான்று வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில் எந்த காட்சிகள், எந்த வசனங்கள் ஆட்சேபனைக்குரியவை என்று குறிப்பிடவில்லை' என்று வெற்றி மாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், அரசு கொள்கைகளுக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும், நாட்டின் நலனுக்கு விரோதமாகவும் உள்ள காட்சிகளை நீக்கினால், சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று தணிக்கை குழு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஆட்சேபத்திற்குரிய காட்சிகள், வசனங்கள் பற்றி படத்தின் தயாரிப்பாளருக்கு தெரிவிக்க வேண்டும், அதனை தயாரிப்பாளர் ஏற்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என்று குறிப்பிடாமல் எப்படி அந்த காட்சிகளை எப்படி மாற்றி அமைக்க முடியும். தணிக்கை குழு படத்தை பார்த்து ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்களை தயாரிப்பாளருக்கு சுட்டிக் காட்ட வேண்டும். என்று அறிவுறுத்தி விசாரணையை வருகிற 11ம் தேதிக்கு தள்ளி வைத்தது.