இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டிரைலர்களை வெளியிட்டனர். இதில் தமிழ் டிரைலர் தற்போது 12 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கமல்ஹாசன் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம்' படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை தற்போது 'தக் லைப்' முறியடித்துள்ளது. இந்த டிரைலர் வெளியாகி, 24 மணி நேரம் முடிய இன்னும் ஒரு பகல் இருக்கிறது. அதனால், பார்வைகள் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு நடித்து வெளிவந்த 'பத்து தல' படத்தின் டிரைலர், 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே அவரது அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதையும் 'தக் லைப்' டிரைலர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'தக் லைப்' படத்தின் ஹிந்தி டிரைலர் 2 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 3 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.