ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
சசிகுமார் தற்போது நடித்து வரும் படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இதில் அவருக்கு மனைவியாக சிம்ரன் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மில்லியன் டாலர் ஸ்டூடியோ சார்பில் யுவராஜ் கணேசன், எம்ஆர்பி எண்டர்டெயின்மென்ட் சார்பில் மகேஷ் ராஜ் தயாரிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். புதுமுகம் அபிஷன் ஜீவந்த் இயக்குகிறார்.
இந்த படத்தில் சசிகுமார் இரண்டு மகன்களுக்கு தந்தையாக நடிக்கிறார். மகன்களாக மலையாளத்தில் பெரிய ஹிட்டான 'ஆவேஷம்' படத்தில் நடித்த மிதுனும், கமலேஷும் மகன்களாக நடிக்கிறார்கள்.
படம் பற்றி சசிகுமார் கூறியிருப்பதாவது : இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல் அங்கிருந்து வந்து சென்னையில் குடியேறும் ஒரு ஈழத் தமிழர் குடும்பம், அந்த ஏரியாவே விரும்பும் ஓர் குடும்பமாக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.
ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் பட்ட கஷ்டத்தையும் வலியையும் பற்றித்தான் பேசுவார்கள். இதில் அவர்கள் கஷ்டத்தை எவ்வளவு தூரம் சந்தோஷமாக மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறோம். கதை சொல்லும்போதே 16 வயதுப் பையனுக்கும் ஒரு சின்னப் பையனுக்கும் தகப்பன்னு தெரியும். கதையைச் சொல்லும்போதே தைரியமாக இருந்தேன்.
நிச்சயமாக இந்தக் கதையை இன்னொரு ஹீரோ கிட்டே சொல்ல முடியாது. இதில் நான்தான் நடிக்கணும். இப்ப இருக்கிற தமிழ் சினிமாவில் 16 வயதுப் பையனுக்கு அப்பாவா ரெண்டு, மூணு பேரைத் தவிர யாரும் நடிக்க மாட்டாங்க. அவங்களுக்கு 25 வயதில் பையன்கூட இருப்பாங்க. இருந்தாலும் அப்பாவா நடிக்கமாட்டாங்க.
இந்த கதையும் சில ஹீரோக்களிடம் சொல்லப்பட்டு பிறகுதான் என்னிடம் வந்தது. நான் நடிக்கத் தயார்னு சொன்னேன். இங்கே கதை தான் முக்கியம். சமீபகாலத்தில், அழகாய் சொன்ன விதத்தில் முழுத் திருப்தியாகக் கேட்டது இந்தக் கதைதான். என்கிறார் சசிகுமார்.