ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஆங்கில இலக்கிய அறிஞரான எஸ்.கிருஷ்ணசாமி, ஆங்கில நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். அப்படி அவரை கவர்ந்த ஒரு நாடகம் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆலிவர் கோல்ட் ஸ்மித்தின் “ஷி ஸ்டூப்ஸ் டு கான்கர்” . இந்த நாடகத்தை 'விசித்திர வனிதா' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து, இயக்கி, அவரே நடிக்கவும் செய்தார்.
அவருடன் பி.எஸ்.சரோஜா, 'புலிமூட்டை' ராமசாமி, பி.ஏ.பெரியநாயகி மற்றும் கே.எஸ். அங்கமுத்து ஆகியோர் நடித்தனர். நம் கண்முன்னால் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல. அவற்றுக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதை சொல்லும் படம். ஒரு பணக்கார பெண் தன்னை விட பெரிய பணக்கார இளைஞனை காதலிக்கும் கதைதான். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் இன்னொரு கதையையும் படத்தில் காட்டுவார்கள்.
புதுமையான திரைக்கதைக்கு இந்த படம் அடையாளமாக கூறப்பட்டது. வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இந்த படத்தை இயக்கி நடித்த கிருஷ்ணசாமி, எம்ஜிஆரின் நெருக்கமான நண்பராக இருந்தார். திரைப்படம் தவிர்த்த எம்ஜிஆரின் மற்ற நிறுவனங்களை கவனித்துக் கொண்டார். 'சித்ரா' என்ற சினிமா வார இதழையும் நடத்தினார். இதனால் பின்னாளில் 'சித்ரா கிருஷ்ணமூர்த்தி' என்று அழைக்கப்பட்டார்.