ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

கடந்த 1996ம் ஆண்டு கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படம் உருவாகி சூப்பர் ஹிட் ஆனது. அதையடுத்து 2017ம் ஆண்டு மீண்டும் அவர்கள் கூட்டணி இந்தியன் 2 படத்தில் இணைந்தனர். என்றாலும் அந்த படம் தொடங்கப்பட்டபோது படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கொரோனா காலகட்டம் என பல விஷயங்களால் அப்படம் தாமதமாகி வந்தது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனத்துடன் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால் கடந்த ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வந்த அந்த படம் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக இந்தியன் 3 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை தொடங்கி அந்த படத்தை திரைக்கு கொண்டு வருவார்களா? என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியன் 3 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதற்கு லைகா நிறுவனம் முன்வராதபோதும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது அப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறது. அதனால் இந்தியன்-3 படப்பிடிப்பு தளத்துக்கு கமலும், ஷங்கரும் மீண்டும் செல்வார்கள் என்பது தெரியவந்துள்ளது.




