காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி | இருமுடிகட்டு : அய்யப்பன் மகிமை பேசும் இருமொழிப் படம் | காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுபா பூஞ்சா | பிளாஷ்பேக் : ஹிந்தி ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதிய கருணாநிதி |

திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் நடிகை தேவயானி. 100 படங்களில் நடித்துள்ள இவர் முதன்முறையாக 'கைக்குட்டை ராணி' என்ற குறும்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் என் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, பி. லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சுமார் இருபது நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த குறும்படம் 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தேவயானி, "எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும், முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச அளவில் விருது பெறுவது மகிழ்ச்சையையும், பெருமையையும் அளிக்கிறது. இதில் பங்காற்றியுள்ள மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இதர சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
அதோடு இந்த குறும்படத்தை பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியை முன்னெடுத்துள்ளனர்.




