நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தானே டைரக்ஷனில் இறங்கியது, அதன்பிறகு பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு எம்பி-யாக தேர்வு செய்யப்பட்டது என பிஸியாக மாறியதால், அவரது படங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. கடந்த வருடம் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய 'எமர்ஜென்சி' என்கிற படத்தில் நடித்திருந்தார் கங்கனா. தற்போது அவரது நடிப்பில் 'பாரத் பாக்ய விதாதா' என்கிற படம் தயாராகி வருகிறது. இந்த வரிகள் நமது இந்திய தேசிய கீதத்தில் இடம்பெறும் வார்த்தைகள் என்றாலும், இது தனக்கு டைட்டிலாகக் கிடைத்ததற்கு பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தான் காரணம் என்று கூறியுள்ளார் கங்கனா.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கங்கனா பேசும்போது: "இந்த படத்திற்கு முதலில் நர்ஸஸ் ஆப் காமா என்று தான் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் முழு கதையையும் கேட்டபோது இந்த டைட்டில் படத்திற்குப் பொருந்தவில்லை என்பதை உணர்ந்தோம். குறிப்பாக இப்படம் இந்தியாவின் ஆன்மாவையும் சாமானியர்களின் துணிச்சலையும் பிரதிபலிப்பதால், இதற்கு 'பாரத் பாக்ய விதாதா' என்ற தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தோம். ஆனால், அந்தத் தலைப்பு ஏற்கனவே நடிகர் ஜான் ஆபிரகாமின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, எந்தவொரு தயக்கமும் காட்டாமல், இதற்காக எந்தவொரு கட்டணமும் பெற்றுக் கொள்ளாமல் ஒரே நாளில் அந்தத் தலைப்பை எங்களுக்காக விட்டுக் கொடுத்தார். இந்த சமயத்தில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்..