ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படம் 'நேசிப்பாயா'. இதனை ஆகாஷ் மனைவி, சினேகாவின் தந்தை பிரிட்டோ தயாரிக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்குகிறார், யுவன் இசை அமைக்கிறார். சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் மூலம் முன்னணி பாலிவுட் நடிகையான கல்கி கோச்லின் தமிழுக்கு வருகிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறும்போது “நேசிப்பாயா தலைப்புக்கு ஏற்ற மாதிரியே காதல் கதை. 30 சதவிகித கதை சென்னையிலும், 70 சதவிகித கதை போர்ச்சுகல் நாட்டிலும் நடக்கிறது. படத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும். இந்த கேரக்டரை எழுதும்போதே கல்கி கோச்லினை மனதில் வைத்துதான் எழுதினேன். காரணம் அவர் தமிழை ஒரு ஸ்டைலாக பேசுவார், ஆங்கில அறிவும் இருக்கிறது.
ஆனால் அவரை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. அவர் நயன்தாராவுக்கு நல்ல தோழி, இதனால் அவர் மூலம் தொடர்பு கொண்டு கதை சொன்னேன். பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். அவர் கேரக்டர்தான் படத்தின் திருப்பமாக இருக்கும். இந்த படத்திற்கு பிறகு அவரை இனி அடிக்கடி தமிழ் படங்களில் பார்க்கலாம்” என்றார்.