தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஜுனியர் என்டிஆர். ஆனால், ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்த பின் அவர் உலக அளவில் புகழ் பெற்றுவிட்டார். அப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றதும் அதற்கு ஒரு காரணம். அப்படத்திற்குப் பிறகு அவர் பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரணும் மற்றொரு கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்திற்குப் பின் அவர்கள் இருவரும் தனி கதாநாயகர்களாக நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜுனியர் என்டிஆர் தனி கதாநாயகனாக நடித்துள்ள 'தேவரா' படத்தின் முதல் பாகம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் அவரது தனி படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படமாக சாதனை புரிந்துள்ளது. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமை மட்டும் 110 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல். மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் சேர்த்து ஒட்டு மொத்தமாக 180 கோடி வரை வியபாரம் நடைபெற்றுள்ளதாம்.
இப்படம் தென் மாநிலங்களில் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தெலுங்கு நடிகரான பிரபாஸுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக தனி அடையாளத்துடன் உயர்வார் ஜுனியர் என்டிஆர்.