டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' |

விஜய் நடிக்கும் படங்கள் கடந்த சில வருடங்களில் சாதனை வசூலைக் குவிப்பது வழக்கமாக இருக்கிறது. கடந்த வாரம் வெளியான 'தி கோட்' படத்தின் வசூல் தற்போது ரூ.300 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் படத்தின் வசூல் 288 கோடி என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல வசூல் இருந்ததால் தற்போது 300 கோடியைக் கடந்திருக்கும் என்கிறார்கள். விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த படங்களில், “லியோ, வாரிசு, பிகில்” ஆகிய படங்கள் 300 கோடி வசூலைக் கடந்துள்ளன.
அடுத்த வாரத்தில் ஓணம், மீலாடி நபி என விடுமுறை நாட்கள் வருவதால் அது வரையிலும் படத்திற்கான வரவேற்பு குறையாது என தியேட்டர் வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி படம் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாக 400 கோடி வசூலைக் கடக்கலாம் என்று சொல்லப்படுகிறது.




