சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

சினிமாவில் தோல்வி என்பது சகஜமான ஒன்று. தற்போதெல்லாம் ஆண்டுக்கு 250 படங்கள் வெளிவருகிறது. ஆனால் 25 படங்கள்தான் வெற்றி பெறுகிறது. தமிழ் சினிமாவின் முதல் தோல்வி படம் என்று 1939ம் ஆண்டு வெளிந்த 'பிரஹலாதா' என்கிறார்கள் சினிமா வரலாற்று ஆசிரியர்கள். தெலுங்கில் 1932ம் ஆண்டு வெளிவந்த 'பக்த பிரஹலாதா' படத்தை தழுவி இது உருவானது.
பி.என்.ராவ் இயக்கி இருந்தார். டி.ஆர்.முத்துராமலிங்கம், எம்.ஆர்.சாந்தலட்சுமி, ஆர்.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எம்ஜிஆர் இந்த படத்தில் இந்திராவாக சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். சாமா சகோதரர்கள் இசை அமைத்திருந்தார்கள். ஷியாம் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் வெளிவந்த 6வது பேசும் படம் இது. அப்போது பரவலாக தமிழ்நாட்டில் பிரஹலாதா கதை நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. சில தொழில்நுட்ப கோளாறுகளால் அதற்கு ஈடாக இந்த படம் அமையாததே தோல்விக்கு காரணம் என்கிறார்கள். சேலம் சங்கர் பிலிமிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. முதலில் வெளியூர்களிலும், பின்னர் சென்னையிலும் வெளியான படம்.