வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

இயக்குனர் நெல்சன் முதல் முறையாக பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வந்தார். இதற்கு 'பிளடி பெக்கர்' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்
கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். ஜெயிலர் தன்ராஜ், அனார்கலி நாசர், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற வாரங்களில் வெளியாகும் என்கிறார்கள்.




