Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி புறப்பட்ட ரஜினி, தனுஷ்

21 ஜன, 2024 - 01:08 IST
எழுத்தின் அளவு:
Ram-Temple-Pran-Pratishtha:-Rajini,-Dhanush-leave-Ayodhya

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயிலில் நாளை (ஜன.,22) கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. மதியம் 12:20 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர். இதனையடுத்து இன்று (ஜன.,21) நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக காரில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி. 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒரு பிரச்னை இது. உச்சநீதிமன்றம் இதற்கு தீர்வு கொடுத்தது. தற்போது அது நிறைவேறியிருக்கிறது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.
நடிகர் தனுஷூம் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அயோத்தி புறப்பட்டார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாமியார் ஆசையை நிறைவேற்றிய குஷ்பு: பிரதமர் மோடி தலையில் கை வைத்து ஆசி வழங்கிய குஷ்பு மாமியார்மாமியார் ஆசையை நிறைவேற்றிய குஷ்பு: ... ஷகீலாவை தாக்கிய வளர்ப்பு மகள் ; போலீஸில் பரஸ்புரம் புகார் ஷகீலாவை தாக்கிய வளர்ப்பு மகள் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)