ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,12ல் வெளியாகிறது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகர் சந்தீப் கிஷான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜன.,3) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் தனுஷ் மேடையில் பேச வரும்போது, கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பாடல் மூலம் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‛ராசாவே உன்ன காணாத நெஞ்சு' பாடலை பாடி அஞ்சலி செலுத்தினார். அந்த பாடலை தனுஷ் உடன் சேர்ந்து அங்கு வந்திருந்த ரசிகர்களும் பாடி விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் தனுஷ், விஜயகாந்த் மறைவின் போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லண்டன் சென்றிருந்தார். இதன்காரணமாக விஜயகாந்தின் உடலுக்கு அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. இந்த நிலையில், அவரது மறைவுக்கு பின் தான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியில் தனுஷ் செய்த இந்த செயல் காண்போரை நெகிழச் செய்தது.