ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில மோசடி குறித்த புகார் ஒன்றை அளித்திருந்தார் நடிகை கவுதமி. அதில், திருவள்ளூர் , ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனக்கு சொந்தமான நிலங்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். கவுதமியின் அந்த புகார் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அழகப்பன் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், அழகப்பன் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இந்த நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் அந்த ஆறு பேரையும் கைது செய்துள்ளார்கள்.