ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

சமீபத்தில் வெளியான 'ஜோ' படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் கோழிப்பண்ணை செல்லத்துரை. சீனு ராமசாமி இயக்குகிறார். புதுமுகங்கள் ஏகன், பிரிகிடாவுடன் யோகி பாபு, ஐஸ்வர்யா தத்தா, மானஸ்வி உள்பட பலர் நடிக்கிறார்கள். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி சீனு ராமசாமி கூறும்போது “கிராமத்து மண்சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல் கதை, காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகிறது. தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
.




