ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்று முடிந்தது. இறுதிப் போட்டியில் பிரபல யு டியூபரான பல்லவி பிரசாந்த் என்றவர் வெற்றி பெற்று வின்னர் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக ஐதராபாத்தில் உள்ள பிரபல அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் அமைக்கப்பட்ட வீட்டில் நடைபெற்று வந்தது.
இறுதி நிகழ்ச்சி முடிந்த பின்பு வின்னர் பல்லவி பிரசாந்த் வெளியில் வந்த போது அவரது ரசிகர்கள் பலர் வன்முறையில் இறங்கினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை அவர்கள் உடைத்தனர். ரன்னர் அப் ஆக வந்த அமர் துப், முன்னாள் போட்டியாளர்கள் அஷ்வினி, கீத்து ராயல் ஆகியோரது கார்களும், சில அரசு பேருந்துகளும் உடைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து அஷ்வினி, கீத்து ஆகியோர் ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அரசுப் பேருந்து கழகமான டிஎஸ்ஆர்டிசி எம்டி விசி சஞ்சனார் பிக் பாஸ் தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் நடிகர் நாகார்ஜுனா ஆகியோரை 'டேக்' செய்து இது குறித்து குற்றம் சாட்டியிருந்தார். ஆறு பேருந்துகள் உடைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். அது குறித்து போலீசிலும் புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் பல்லவி பிரசாந்த் மற்றும் அவரது ரசிகர்கள் மீது காவல் துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தமிழ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து 'ரெட் கார்டு' கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ரசிகர்கள் தன்னைத் தாக்கியதாக நடிகை வனிதா விஜயகுமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு சிலர் வன்முறை செய்யும் அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது.




