'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயப்பிரதா. தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் 'சலங்கை ஒலி' படம் மூலம் மக்கள் மனதில் பதிந்தவர். சென்னை அண்ணா சாலையில் திரையரங்கம் ஒன்றை ஜெயப்பிரதா நடத்தி வந்தார். அங்கு பணிபுரியும் தொழிலாளா்களின் ஊதியத்தில் இஎஸ்ஐ தொகை பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அந்த தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் ஜெயப்பிரதா செ லுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவா் மீது எழும்பூா் நீதிமன்றத்தில் தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம் வழக்கு தொடா்ந்தது.
இந்த வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை உயா்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதான வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம் ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது.
இதை எதிர்த்து ஜெயப்பிரதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் விசாரணை நடத்தியது. பின்னர், சிறை தண்டனைக்காக ஜெயப்பிரதா சரணடைய வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளித்தும், தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டது. அதோடு இஎஸ்ஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.




