'வா வாத்தியார்' இரண்டே வாரங்களில் ஓடிடி ரிலீஸ், ஏன் ? | முகம் தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை : ராஷ்மிகா | மவுன படமான “காந்தி டாக்ஸ்” டிரைலர் வெளியீடு | சித்தார்த்தின் ‛ரவுடி அண்ட் கோ' முதல் பார்வை வெளியீடு | ரீ ரிலீசில் வசூல் சாதனை செய்த அஜித்தின் மங்காத்தா | தேவரா 2 படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது | ரூ.350 கோடி வசூல் கடந்த சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வரபிரசாத் காரு' | பார்டர் 2 வில் அக்ஷய் கன்னா காட்சிகள் இடம் பெறாதது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம் | ரீ ரிலீஸ் ஆகிறது சிம்புவின் 'சிலம்பாட்டம்' | ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? 'ஹாட்ஸ்பாட் 3' வருமா? இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் |

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த குஷி படத்திற்கு பிறகு சமந்தா நடிக்கும் புதிய படங்கள் குறித்த அறிவிப்பு என்னும் வெளியாகவில்லை. அதேசமயம் ஏற்கனவே அவர் கமிட்டாகியிருந்த சென்னை ஸ்டோரிஸ் என்ற ஆங்கில படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். அதோடு மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று வரும் சமந்தா, தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பல உதவிகளை செய்து வரும் சமந்தா, விரைவில் இந்த நிறுவனத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கத் திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமந்தா, கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் அவரை பிரிந்தார். அதன் பிறகு மறுமணம் ஏதும் செய்து கொள்ளாமல் இருக்கும் சமந்தா, தற்போது இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டு இருப்பதால், அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.




