என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்ஷரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் |
விஜய் நடித்து நாளை மறுதினம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ள படம் 'லியோ'. இதே டைட்டிலை தெலுங்கில் வேறு ஒரு தயாரிப்பாளர் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி படத்தை வெளியிட தடை உத்தரவை வாங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து 'லியோ' படம் தெலுங்கில் வெளியாகுமா என்ற புதிய சர்ச்சை எழுந்தது.
படத்தைத் தெலுங்கில் வெளியிடும் வினியோகஸ்தரான நாகவம்சி படம் திட்டமிட்டபடி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். “இது தகவல் தொடர்பு சிக்கலால் எழுந்த ஒரு பிரச்சனை, யாரோ ஒருவர் 'லியோ' தெலுங்கு தலைப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தை நாங்கள் சீக்கிரமாகவே தீர்த்துவிடுவோம். இன்றுதான் நீதிமன்ற உத்தரவு பற்றி தெரிய வந்தது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை, சிக்கலில்லாமல் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும்,” என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் 'லியோ' படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடந்து வருகிறது. இப்படி ஒரு தடை உத்தரவு வந்ததும் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒரு சிக்கலா என அரண்டு போய் உள்ளனர்.